Minority students can apply to get education scholarships from the Central Government
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மைய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2017-2018 கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ( NSP ) ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.
2017-2018-ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின்கீழ் 1,35,127 மாணவ மாணவியா;களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மைய அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகை மாணவ மாணவியர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.
கல்வி உதவித்தொகை (புதியது) மாணவ மாணவியர்கள் 31.08.2017 வரையிலும் புதுப்பித்தல் இனங்களுக்கு 31.07.2017 வரையிலும் இணைய தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் அனைவரும் இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பாத மாணவ மாணவியர்களின் இணை தள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
இணைய தளத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை மிகுந்த கவனத்துடன் உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் எந்த நிலையிலும் மாற்றவோ திருத்தவோ இயலாது. மாணவ மாணவியரின் ஆதார் எண்களின் விவரம் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கு இணைய தளத்தால் பகிரப்படமாட்டாது.
கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது உடனுக்குடன் பரிசீலித்து விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சான்றாவணங்களுடன் சரிபார்த்து உறுதி செய்து தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், மைய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ( NSP) புதிய கல்வி நிலையங்களை இணைப்பதற்கு DISE / AISHE குறியீட்டு எண் அவசியமாகும். புதிய கல்வி நிலையங்கள் ( NSP) இணையதளத்தில் தங்களது கல்வி நிலையத்தின் அடிப்படை விவரங்களை உடன் பதிவு செய்ய சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தங்களுக்கான பயனாளர் குறியீட்டு விவரங்களை உடனடியாக பெற்றுகொள்ள வேண்டும்.
மேலும், NSP இணைய தளத்தில் ஏற்கனவே புதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் தொலைபேசி எண்கள் அல்லது பாடப்பிhpவில் மாற்றம் இருப்பின் உடன் திருத்தம் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய DISE / AISHE குறியீட்டு எண்ணை மாணவ மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேயைhனஃஇணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தனைகள் அடங்கிய விரிவான விளம்பரங்கள் http://www.bcmbcmw.tn.gov.in/welfschemesminorities.htm, என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இத்திட்டம் தொடர்பான மைய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் schemesperformance/scholarship-schemes என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு, சிறுபான்மையின மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகையினை பெற்று பயனடையலாம், என தெரிவித்துள்ளார்.