மு.க.ஸ்டாலின் 65வது பிறந்த நாளையொட்டி பெரம்பலூர் நகர திமுக சார்பில் குருதி கொடை

schedule
2017-03-19 | 07:46h
update
2026-09-16 | 13:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

MK Stalin, DMK’s 65th birth anniversary on behalf of the City of in Perambalur blood donation

பெரம்பலூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 65வது பிறந்த நாளையொட்டி, பெரம்பலூர் நகர திமுக சார்பில் நடந்த ரத்த தான முகாம் நடைபெற்றது.

Advertisement

பெரம்பலூர் நகர திமுக சார்பில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. . இதையொட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கும் முகாம் நடந்தது. இந்த முகாமினை முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ. இராஜா தொடங்கி வைத்தார்.

இதில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சி.இராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், கி.முகுந்தன் மற்றும் பெரம்பலூர் நகர செயலளார் ம.பிரபாகரன், மருத்துவர் அணியை சேர்ந்தவர் டாக்டர் வல்லபன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட, ஒன்றிய, நகர இளைஞரணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூறுக்கும் மேற்பட்ட பேர்கள் ரத்த தானம் வழங்கினர். இதில் திராவிடர் கழகத்தை தொண்டர்களும் நிர்வாகிகளும் குருதிக் கொடை வழங்கினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.09.2026 - 13:23:55
Privacy-Data & cookie usage: