பெரம்பலூர் அருகே 22 லட்சம் மதிப்பீட்டில் ஏரி புனரமைக்கும் பணி: எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைத்தனர்.

schedule
2020-06-05 | 14:13h
update
2020-06-05 | 14:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

MLAs start work on lake reconstruction near Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள அயிலூர் கிராமத்தில் உள்ள 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட அயிலூர் பெரிய ஏரி மற்றும் அதற்கான வரத்து வாய்க்கால் பகுதியில் கருவேல மரம், சீமை கருவேலி மற்றும் ஆடாதொடா செடிகள் முளைத்து புதர்மண்டி கிடக்கிறது. இதனை பொதுப்பணித்துறை மற்றும் நீர் வள ஆதாரத் துறையின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தில் ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் அயிலூர் பெரிய ஏரியை சீரமைக்கும் பணி திட்டமிடப்பட்டு, அதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இப்பணிகளை பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், அயிலூர் ஊராட்சித் தலைவர் ராமர், சிறுவாச்சூர் முத்துசாமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், விவசாயிகள், கட்சிப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 10:42:36
Privacy-Data & cookie usage: