மோடி 2ம் முறையாக பிரதமராக பதவி ஏற்பு: பெரம்பலூரில் பாஜகவினர் கறிவிருந்து!

schedule
2019-05-30 | 15:34h
update
2019-05-30 | 15:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Modi will be the PM candidate for the second time in the Perambalur BJP! Celebrate in Curry Feast

பெரம்பலூர் மாவட்ட பாஜக சார்பில், இரண்டாவது முறையா மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதுடன், இரண்டாவது முறையாக பாரதப்பிரதமராக இன்று நரேந்திர மோடி பதவி ஏற்பதை முன்னிட்டு மகிழ்ச்சி அடைந்ததால், மொட்டை அடித்து, கிடா வெட்டி விருந்து வைத்து அசத்தினர்.

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் தேசிய ஜனநாயக கூட்டணி கடும் தோல்வியை சந்தித்து இருந்தாலும், மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதில் பாஜகவினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பெரியசாமி கோவிலில் மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளருமான சி.சந்திரசேகர் கிடா வெட்டி விருந்து வைத்து, அசத்தினார். மேலும், ராமசாமி என்ற தொண்டர் மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்தினார்.

Advertisement

எப்போதும் வழக்கமாக சாம்பர் சாதம், தயிர் சாதம் மட்டும் தொண்டர்களுக்கு வழங்கிய பாஜகவும், திராவிட கட்சிகளுக்கு இணையாக மாறி சைவத்தில் இருந்து அசைவத்திற்கு மாறி கறிவிருந்து படைத்து அசத்தி உள்ளது. விருந்திற்கு வந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட அனைவருக்கும், கிடா ஆட்டுக் கறி, சில்லி சிக்கன், கறிக்கொழம்பு, சாம்பார், ரசம், தயிர் ஆகியவை வழங்கினர். இதில் உற்சாகமான பாஜக தொண்டர்கள் அணிஅணியாக கலந்து கொண்டனர். மேலும், அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கும் கட்சியினருக்கு இணையாக பாரபட்சமின்றி விருந்து கொடுத்தனர்.

இதனால் திராவிட கட்சிகள் சற்று வியப்படைந்துள்ளது. இதில், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் சிவசங்கரன், ஒன்றிய தலைவர் கலைச்செல்வன், செய்தி தொடர்பாளர் எம்.ஆர். இளங்கோவன் உள்ளிட்ட பல பாஜக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 11:30:42
Privacy-Data & cookie usage: