Monsoon failure for all crops per acre of agricultural associations seeking compensation of Rs 25 lakh in the resolution of the meeting

20161213_134922

பெரம்பலூர் மாவட்டத்தில், பருவ மழை பொய்த்து போனதால் அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் வழங்க கோரி அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், கரும்பிற்கான குறைந்த கட்ச ஆதார விலையான டன் ஒன்றிற்கு 4 ஆயிரம் வழங்க வேண்டும், கடந்த ஆண்டு வெட்டிய கரும்பிற்கு நிலுவையாக உள்ள தொகை ரூ. 20 கோடியே 46 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் வழங்காமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து, வருகின்ற 16 ம் தேதி பெரம்பலூர் எறையூர் சர்க்கரை ஆலை முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என்றும், தமிழக அளவில் பருவ மழை பொய்த்து போனதால், அனைத்து பயிர்களுக்கும் ஏக்கர் ஒன்றிற்கு ரூ.25 ஆயிரம் வழங்க கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஏ.கே.ராஜேந்திரன், தமிழக விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் ஆர். ராஜாசிதம்பரம், உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!