பெரம்பலூர் அருகே தண்ணீர் எடுத்து சென்ற பெண் மீது மொபட் மோதல்! லிப்ட் கேட்டு வந்த பெண் பலி!

schedule
2019-07-03 | 07:33h
update
2019-07-03 | 07:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Moppet clashes with woman who took to water near Perambalur Woman who asked for lift dies

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்தவர் பெருமாள் மகன் ஆறுமுகம் (வயது 40), இவர் வளையல் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் வியாபாரத்திற்கு செல்வதற்காக சுமார் இன்று காலை 4.30 மணி அளவில் குரும்பலூரில் இருந்து பெரம்பலூரை நோக்கி மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ஜோதி மனைவி லட்சுமி (வயது சுமார் 55). இவர் உழவர் சந்தையில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்திற்கு செல்ல, பேருந்திற்காக காத்திருந்த அவர், ஆறுமுகத்தின் வண்டியில் லிப்ட் கேட்டு பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மொபட் செஞ்சேரி அருகே இன்று காலை சுமார் 4.45 மணியளவில் வந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் காவேரி பைப் லைனில் கசியும் நீரை பிடித்து கொண்டு லெட்சுமி என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த மொபட் தண்ணீர் எடுத்து வந்த லெட்சுமி என்ற பெண்ணின் மீது மோதியது. இதில் இந்தப்பெண்ணும் காயமடைந்தார். இதில் தக்காளி வியாபாரி லட்சுமியும் படும்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ஆறுமுகம் காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், விபத்து மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போக்குவரத்து சீர் செய்தனர். விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்னர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 06:44:13
Privacy-Data & cookie usage: