சென்னைவாசிகள் அதிக வாகனங்களில் பெரம்பலூர் வருகை: 207 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

schedule
2020-06-19 | 05:32h
update
2020-06-19 | 05:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

More residents in Chennai visit Perambalur: 207 isolated

சென்னையில் இன்று முதல் இம்மாதம் 30-ந்தேதி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது

Advertisement

தமிழ்நாடு முதல்அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பெரம்பலூh; நகரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு சென்று வசித்துவருபவர்கள் கடந்த 2 தினங்களாக சொந்த கார்கள், டாக்சிகள், மற்றும் இருசக்கர வாகனங்களில் பெரம்பலூருக்கு திரும்பி வந்துள்ளனா;. நேற்று சாலைகளில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து அலுவலக பதிவு எண்களைக்கொண்ட வாகனங்களில் அதிகம் பேர் பயணித்து வந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டஎல்லையிலும்,பெரம்பலூர் நகரிலும் போலீசார் சென்னை பதிவு எண்களை கொண்ட வாகனங்களை தங்களது பதிவேடுகளில் றித்துவைத்துக்கொண்டனர். அவர்களது முகவரிகளை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே பெரம்பலூர் ரோவர் கல்லூரி விடுதியில் 33பேரும், வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரியில் 65பேரும், வேப்பூர் அரசு கலைக் கல்லூரியில் 35பேரும், பாடாலூரில் உள்ள அரசுஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 74 பேரும் கண்டறியப்பட்டு மொத்தம் 207 பேர் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 04:46:59
Privacy-Data & cookie usage: