more than 100 appointment orders for the jober, presented by RT Ramachandiran MLA in Job Mela camp in Kunnam

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று, குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் தனியார் துறை நிறுவனங்கள் பெரம்பலூர் மற்றும் திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள 94 க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்தனர் இவ்வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர். அதனடிப்படையில் இன்று காலை நடைபெற்ற முகாம் மூலமாக தேர;வு செய்யப்பட்டவர்களில் முதற்கட்டமாக சுமார; 100 நபர்களுக்கு குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.இராமசந்திரன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும் மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்காகவும் தனியார் நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து குன்னம் எம்.எல்.ஏ ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது:

தன்உடல் நலனையும் பாராமல் நமக்காக உழைத்து மறைந்த நமது அம்மா அவர்கள் இளைஞர்களின் எதிர்காலம் சிறந்து விளங்க இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம் நடத்திட உத்தரவிட்டு வழிகாட்டினார்கள். அம்மா வழியில் நடைபோடும் தமிழக அரசு இளைஞர்கள் வேலை தேடி அலைவதை விடவும் அவர்களை தேடிசென்று நிறுவனங்கள் வேலை வழங்கிட இவ்வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.

படிக்கவும் வைத்து அவர்களுக்கு வேலையும் பெற பெற்றோர்கள் படும் சிரமங்களை இளைஞர்கள் உணரவேண்டும். நமது பகுதிக்கே வந்து முகாம் நடத்துவதன் நோக்கம் அனைத்து பகுதி இளைஞர்களும் பயன்பெறவேண்டும் என்பதே. மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை. முயற்சி இல்லா நிலையும் மரணமே என சொல்வார்கள். அதனை நாம் நன்கு கவனத்தில் கொள்ளவேண்டும். அதோடு அப்துல் கலாம் அவர்கள், நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். மாறாக நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று சொன்ன வார்த்தைகளை இன்றைய இளைஞர்கள் நினைவில் கொண்டு எதிர்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழவேண்டும். இன்று நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு முகாம் மூலமாக பணியாணை பெற்றுள்ள அனைத்து இளைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன், என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) தேவநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (இளநிலை) செல்வகுமார், மாவட்ட அறங்காவல் குழுத் தலைவர் பூவை தா.செழியன், பெரம்பலூர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் என்.கே. கர்ணன், பெரம்பலூர் நிலவளவங்கித் தலைவர் சிவபிரகாசம், புதுவேட்டக்குடி தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் இராஜேந்திரன், ஆவின் நிர்வாக குழு உறுப்பினர் குணசீலன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!