பெரம்பலூர் ஒன்றிய அமமுக கூண்டோடு கலைப்பு: ஒன்றிய செயலாளர் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

schedule
2019-01-20 | 04:50h
update
2019-01-20 | 04:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The dissolution of the Perambalur AMMK Union: more than 200 people including the Union Secretary with joined the AIADMK.

பெரம்பலூரில் 200க்கும் மேற்பட்ட அமமுக-வினர் அதிமுக எம்பி வைத்திலிங்கம் முன்னிலையில் அதிமுகவில் நேற்று இணைந்தனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் நடந்த இணைப்பு விழாவில் அமமுக பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமையில் 200க்கு மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்பி ,மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். எம்.பி., வைத்திலிங்கம் கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் எம்பிக்கள் மருதராஜா (பெரம்பலூர்), சந்திரகாசி (சிதம்பரம்), ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, மாவட்ட நிர்வாகிகள் துரை, ராணி, லெட்சுமி, ராஜராம், பூவைசெழியன், ராஜேஸ்வரி, வக்கீல்கள் கணேசன், பாலமுருகன், கீழக்கரை பன்னீர்செல்வம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம் : பெரம்பலூரில் அமமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமையில் 200க்கு மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்பி ,மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2026 - 22:13:50
Privacy-Data & cookie usage: