60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்பட 350க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்ட அதிமுகவில் இணைந்தனர்

schedule
2020-07-23 | 05:52h
update
2020-07-23 | 05:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

More than 350 people, including more than 60 youths, joined the Perambalur district AIADMK

பெரம்பலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், வேப்பூர் மற்றும் ஓலைப்பாடியை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 60க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டனர். அவர்களை எம்.எல்.ஏ ஆர்.டி.இராமச்சந்திரன் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது, வேப்பூர் ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, வேட்டக்குடி கிருஷ்ணன், குன்னம் குணசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

முன்னதாக, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த எறையூர், ரஞ்சன்குடி, மங்களமேடு, வாலிகண்டபுரம் பகுதியைச் சேர்ந்த திமுக, தேதிமுக, விசிக கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். டி. ராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

முன்னதாக எறையூரில் புதியதாக அமைக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்து அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, ஒன்றிய பொருளாளர் ஜெய்சங்கர், ஒன்றிய இணை செயலாளர் கலாவதி கண்ணபிரான், ஒன்றிய துணை செயலாளர் சாந்தி இளங்கோவன், வாலிகண்டபுரம் ஊராட்சி துணை தலைவர் பவானி ரெங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.06.2026 - 19:53:41
Privacy-Data & cookie usage: