பெரம்பலூர் அருகே கிணற்றில் குதித்து தாய், மகள் தற்கொலை! போலீசார் விசாரணை!

schedule
2020-06-06 | 16:11h
update
2020-06-06 | 16:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Mother and daughter commit suicide by jumping into a well near Perambalur Police are investigating!

பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement


இன்று காலை, பூலாம்பாடியை சேர்ந்த கந்தசாமி மகன் ஜெகதீசன் என்பவரது வயலில் உள்ள கிணற்றில், ஒரு குழந்தையின் சடத்துடன் பெண் சடலம் மிதப்பதாக வந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற அரும்பாவூர் போலீசார், தீயணைப்பு படை உதவியுடன் கிணற்றில் மிதந்த இரு சடலங்களை மீட்டனர். பின்னர் நடத்தி விசாரணையில், வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் பூலாம்பாடியை சேர்ந்தவர் குமார் என்வரின் மனைவி மரியா பிரின்சி (வயது35) தனுஷ்கா(6) என்பதும் தெரிய வந்தது.

குமார் வெளிநாட்டில் வேலைபார்த்து வருவதால், அவரது தாய் செல்லத்துடன் மரியா பரின்சி தனது குழந்தைகள் தருண் (8), தனுஷ்கா(6) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 3 நாள்களாக மரியா பிரின்சி தனது பெண் குழந்தை தனுஷ்காவுடன் காணவில்லை. இதையடுத்து, அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி வந்ததும் தெரிய வந்தது. வழக்கப் பதிவு செய்த போலீசார் மருத்துவ குழுவினருடன் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தி தாய் – மகள் இறந்ததற்கான காரணம் என்ன? என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 19:45:37
Privacy-Data & cookie usage: