பெரம்பலூர் அருகே ஆப்ரேசன் செய்த வலி தாங்க முடியாமல், எலி மருந்து சாப்பிட்ட 3 குழந்தைகளின் தாய் சாவு!

schedule
2019-10-06 | 09:20h
update
2019-10-06 | 09:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Mother of 3 children dies after eating rat’s Poison near Perambalur

Mother of 3 children dies after eating rat’s Poison near Perambalur

பெரம்பலூர் அருகே ஆபரேசனால் ஏற்பட்ட வயிற்று வலி தாங்க முடியாமல் எலி மருந்து சாப்பிட்ட மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 30), இவரது மனைவி கவுசல்யா (வயது 25), இருவருக்கும், சுமார் கடந்த 7 ஆண்டுகள் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரியதர்ஷினி ( 6), நிஷாத் (3), சபானா என்ற 3 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கவுசல்யாவிற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து கடும் வயிற்றில் வலி ஏற்பட்டதால் அதில் கடும் தொல்லை அடைந்துள்ளார். கடந்த அக்.3ம் தேதி இரவு 8.30 மணிக்கு வயிற்று வலியால் அவதிப்பட்ட கவுசல்யா வலி தாளாமல் எலியை கொல்ல பயன்படுத்தப்படும் எலிபேஸ்ட்டை தின்று விட்டார் . இது குறித்து தகவல தெரிந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு, அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை, இன்று காலை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 குழந்தைகளின் தாய் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 01:02:45
Privacy-Data & cookie usage: