குடும்ப தகராறில் கைகுழந்தையுடன் தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற தாய்!

schedule
2021-09-27 | 09:43h
update
2021-09-27 | 09:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Mother who tried to commit suicide by setting fire to her infant in a family dispute!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வரகுபாடி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி பிரியங்கா (வயது 25), கணவன் – மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில், மண்ணென்ணெய் உடலில் ஊற்றி 6 மாத கைகுழந்தையுடன் தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். அதில் 6 மாத கை குழந்தை திரிஷா, மற்றும் பிரியாங்கா ஆகிய இருவரும் அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தாய் பிரியங்காவிற்கு கழுத்து முகப் பகுதியில் தீக்காயமும், குழந்தை திரிசாவிற்கு முதுகிலும் தீக்காயம் ஏற்பட்டது. அன்பழகன் – பிரியாங்கா ஆகியோருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. மேலும் மூன்றரை வயதில் கிருத்திகா என்ற பெண் குழந்தையும் உள்ளார். 6 மாத கைக்குழந்தையுடன் தாய் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 09:48:41
Privacy-Data & cookie usage: