பெரம்பலூர் அருகே மர்ம நபர்களால் தூங்கி கொண்டிருந்த பெண் கொலை; டி.எஸ்.பி நேரடி விசாரணை !

schedule
2021-09-20 | 08:05h
update
2021-09-20 | 08:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Murder of a sleeping woman by mysterious persons near Perambalur; DSP Live Inquiry!

பெரம்பலூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பெரம்பலூர் டி.எஸ்.பி சஞ்சீவ்குமார், சம்பவ இடத்திற்கு போலீசாருடன் நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் விளாமத்துர் கிராம எல்லை அமைந்துள்ளது. புறநகர் பகுதியான ஏ.சி.ஆர் நகரை சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 90), நேற்றிரவு , மழை பெய்ததால், அவரின் மகன் சங்கர் வீட்டில் உள்ள வராண்டாவில் படுத்து தூங்கியுள்ளார். அந்த வீட்டின் பின்பகுதியில் சங்கரின் மனைவி, மற்றும் குடும்பத்தார் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 7.15 மணிக்கு மேல் ஆகியும், மூதாட்டி எழுந்து வராததால், அப்பகுதியில் வசித்து வரும் முருகேசன் என்பவர், வராண்டாவை எட்டி பார்த்த போது, மூதாட்டி சடலமாக ரத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர். பச்சையம்மாளின் மகன்கள் அப்பாதுரை, ராஜேந்திரன், சங்கர், மற்றும் செல்லக்கண்ணு, இந்திராணி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி சஞ்சீவ்குமார் மற்றும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்த மர்ம நபர்கள், மூதாட்டி அணிந்திருந்த வெள்ளி மோதிரம் சுருக்குப் பைபைய எடுத்து சென்றுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக் காரணம் குறித்து, பச்சையம்மாளின், உறவினர்கள், அக்கம்பக்கதார்களிடம் தீவிர விசாரணை நடத்துவதுடன் அருகில் உள்ள வீடுகளில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் கைப்பற்றியும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். உடற்கூறு ஆய்விற்காக பச்சையம்மாளிடன் உடல், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 08:50:10
Privacy-Data & cookie usage: