பெரம்பலூர் அருகே கணவன் கொலை: மனைவி கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு

schedule
2017-05-17 | 08:47h
update
2026-06-05 | 12:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் கிராமத்தில் கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த பெயிண்டிங் மேஸ்திரியை கழுத்தறுத்து கொலை செய்த அவரது மனைவி மற்றும் கள்ள காதலனை கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் இருந்து வெண்பாவூர் செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கை.களத்தூர் போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Advertisement

விசாரணையில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தவர் வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலத்தை சேர்ந்த ராஜசேகரன் மகன் மோகன் ( வயது47) என்பதும், இவர் பெயிண்டிங் மேஸ்திரி வேலை செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் கொலை செய்யப்பட்டுள்ள மோகனுக்கு பிரியா (வயது 40) என்ற மனைவியும், தீபிகா (12), விஜயா (8) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் மோகன் வீட்டிலிருந்து காணாமல் போனது குறித்து 2 நாட்களுக்கு முன்பு அரும்பாவூர் போலீசில் மோகன் மனைவி பிரியா புகார் கொடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து பிரியாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தனது கணவரிடம் பெயிண்டிங் வேலை செய்த அன்னமங்கலத்தை சேர்ந்த அழகர் மகன் பிரபு (வயது 25) என்பவருடன் கள்ளகாதல் ஏற்பட்டதாகவும், இதற்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலன் பிரபுவுடன் சேர்ந்து வெண்பாவூர் வனப்பகுதியில் வைத்து கழுத்தறுத்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

அதன்பேரில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுஜாதா முன்னிலையில் கள்ளக்காதலர்களை போலீசார் ஆஜர்படுத்தினர், வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தவிட்டார். அதன் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 12:59:01
Privacy-Data & cookie usage: