மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்.

schedule
2016-01-30 | 09:20h
update
2026-04-22 | 17:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

சிறுபான்மையினர் நலத்துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை சமுதாயமான முஸ்லீம் சமூகத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் சுய தொழில் செய்து வருமானம் ஈட்ட வகை செய்யும் பொருட்டு பல்வேறு பயிற்சிகள் அளித்திடவும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியரும், பொருளாளராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரும் உள்ளார்கள்.

இச்சங்கத்தின் மூலம் ரூ.10 லட்சம் அரசுக்கு அளிக்கும் பட்சத்தில் தமிழக அரசு இணை மானியமாக ரூ.20 லட்சம் வழங்கும். இந்த தொகையைப் பயன்படுத்தி ஆதரவற்ற இஸ்லாமியப்பெண்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் அதன் செயலர் அ.ஹமிதா கலாம், ஏ.எல்.அபுல்கலாம், லப்பைக்குடிகாடைச் சேர்ந்த சுல்தான் இப்ராகிம், அப்துல்ஹாதி, பக்கீர் முகமது, அப்துல் காதர், அம்மமாபாளையத்தைச் சேர்ந்த முகமது சித்திக், முகமது பட்டினத்தை சேர்ந்த சௌகத் அலி, குரும்பலூர் ஹிதயதுல்லா, முபாரக் அலி உள்ளிட்டோர் வழங்கிய நன்கொடையாக பெரம்பலூர் மாவட்ட ஜமாத்தார்கள் இதுவரை ரூ.10 லட்சத்தை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார்கள்.
அதனடிப்படையில் பெரம்பலூர் ஆட்சியர் க.நந்தகுமார் பெரம்பலூர் மாவட்ட ஜமாத்தாரர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்தனர்.

இச்சங்கத்தின் மூலம் ஆதரவற்ற முஸ்லீம் விதவைகளுக்கு கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி அளித்தல் மற்றும் சிறுதொழில் துவங்க உதவிடல், ஆதரவற்ற முஸ்லீம் விதவைகள் மற்றும் வயதானவர்களுக்கு இருப்பிடம் அமைத்துக் கொடுத்தல், மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தி மருத்துவ உதவிகள் கிடைக்கச் செய்தல், தையல் பூ வேலைப்பாடுகள் மற்றம் காலணிகள் செய்வது குறித்த பயிற்சிகள் அளிக்கபடும்.

மேலும், மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள முஸ்லீம் மகளிருக்கு மத்திய மற்றும் இதர மாநில அரசுகளிடமிருந்து சலுகைகள், உதவித் தொகைகள் கிடைக்க வழிவகை செய்தல், சுய உதவிக் குழுக்கள் அமைத்து பயிற்சி அளித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பலதரப்பட்ட கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் தேவையான பெண்களுக்கு சிறிய வியாபாரம் துவஙகக் கடனுதவி புரிதல் உள்ளிட்ட உதவிகளை இச்சங்கம் செயல்படுத்தும்.

பொதுவாக கஷ்டப்படும் முஸ்லீம் பெண்களுக்கு சங்கம் தகுதியானவர்கள் என்று நினைத்தால் அவா;கள் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான உதவி புரிதல் போன்ற நலத்திட்டங்கள் இச்சங்கத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்புவோர் மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 17:59:28
Privacy-Data & cookie usage: