பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் அகற்றுவதே என்னுடைய வேலை! அரியலூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு!

schedule
2025-09-13 | 18:13h
update
2025-09-13 | 18:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

My job is to remove the fascist BJP government and the poison DMK government! TVK Leader Vijay’s speech in Ariyalur!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று அரியலூரில், பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: அனைவருக்கும் வணக்கம், சாரி லேட்டாயிடுச்சி.

போர்ல ஜெயிக்கத்துக்காக, குல தெய்வம் கோயிலில் சாமிகும்பிட்டுதான் போருக்கு போவார்களாம்! அந்த மாதிரி அடுத்த வருசம் நடக்க ஜனநாயக போருக்கு மக்களை உங்களை பார்த்துவிட்டு போலாம் என வந்திருக்கேன்.

இங்கு வந்திருக்கிற உங்களுக்காக, உங்கள் அன்புக்காக, எவ்வளவு பெரிய உயரத்தையும், வருமானத்தையும், வசதியையும் தூக்கி எறிந்துவிட்டு வராலாம்ங்க.. உங்களைவிட உங்கள் பாசத்தை விட எனக்கு உலகத்தில எதுவும் பெரிதாக தெரியவில்லை. சாதரணமான விஜயை இந்த உயத்தில் வைத்திருக்கிறிர்கள்!! என்னங்க பெரிய பணம் வேணும்ங்கதை பார்த்தாச்சு, அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்கனும்மா என்ன? அதுக்கு கொஞ்சம் கூட அவசியமுல் இல்ல!

எனக்காக எல்லாம் கொடுத்த உங்களுக்காக உழைப்பதை தவிர வேலையில்லை. நம்முடைய எதிரிகள் நான் மரியாதை பேசினால் கூட தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். அண்ணா சொன்ன பஞ்ச் தான் வாழ்க! வசவாளர்கள்!

Advertisement

பாஜக கொஞ்சம் நஞ்சம் கொடுமையாக செய்கிறார்கள், ஓட்டு திருட்டு மோசன வேலைகளை செய்கிறார்கள். ஒன் இந்தியா! ஒரே நேசன், என மாநில அரசுகளை கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவது, தொகுதிகள் மறுசீராய்வை எதிர்க்கிறோம். இவைகள் எதிர்க்கட்சிகள், தென்இந்தியாவை செய்யும் துரோகம், திமுக அரசு நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள்.

இவர்கள் நல்லது செய்வார்கள் என தேர்ந்தெடுத்தோம். ஆனால், திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலயும், கீழயும் மோசமாக ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்களை கேள்வி கேட்கத்தான் வந்துள்ளேன். பாசிச பாஜக, பாய்சன் திமுகவை அகற்றுவதே என்னுடைய வேலை, பாஜக, திமுக ஒரே வகையாறாதான்! இரண்டுமே மறைமுக உறவுக்காரர்கள்தான் என்றும், மாறி மாறி பேசுவதில் முதல்வர் ப்ரியலிண்ட்! ஒன்றிய பிரதமர், இப்போது இந்திய பிரதமர், மைடியர் சி.எம் சார் என பேசினார்.

ரீல்ஸ் வேற ரியால்டி வேற சொல்லிட்டு, நீங்களே சொன்ன ரீல்ஸ் அறுந்து போய்விட்டது. தேர்தல் அறிக்கையில் திமுக கொடுத்த நிறைவேற்றாத கோரிக்களை அடுக்கினார். செய்வோம் என்றார்களே! செய்தார்களா? கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு, நீட், கல்விக்கடன் ரத்து, பெண்களுக்கு அனைவருக்கும் ஆயிரம் ருபாய், மீனவ பழங்குடியின பட்டியல் சேர்த்தீர்களா! மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டி கொடுத்தீர்களா, மீன் உலர்களம் கட்டி கொடுத்தீர்களா! நெசவாளர் கடன் வட்டி குறைப்பு, சொந்த ஆட்டோ வாங்குபவர்களுக்கு மானியம், பழைய பென்சன், தமிழக வேலைவாய்ப்புகளில் 70 தமிழர்களுக்கு என்பதையுமு; தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், ரேசன் கடை உளுந்து வழங்குபடுவதை கொடுத்தீர்களா! 35 மேற்பட்ட ஆதவற்ற பெண்களுக்க கல்விக்கு தகுந்த வேலை வழங்குப்படும் என செய்தீர்களா! என பேசினார்.

அரியலூர் முந்திரி, சிமெண்ட் உற்பத்தி ஆமைகள் மாசுபாடு, யுனஸ்கோ அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் முறையாக பராமரிக்க வேண்டும், கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைக்கவில்லை, மருதையாறு குறுக்கே போக்குவரத்து துறை அமைச்சர் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் காட்டுமன்னார்கோயில் -ஜெயங்கொண்டம் – கும்பகோணம் ரயில்வே சாலை அமைக்க வேண்டும்,

தீர்வு நோக்கி போரதும், தீர்வை காண்பது தான் தவெக லட்சியம். தேர்தல் அறிக்கையில் சொல்வொம் அதைசெய்வோம் இதை செய்வோம் என சொல்லமாட்டோம்! மருத்துவம், குடிநீர், ரேசன் மின்சாரம், சாலைவசதி, , பெண்கள் பாதுகாப்பு, நோ காம்ரமைஸ், ஏழ்மை இல்லாத தமிழகம், வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆட்சி இல்லாத, ஊழல் இல்லாத தமிழகம், மக்களாட்சி எது சாத்தியமோ அதைத்தான் செய்வோம்! என பேசினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 07:18:38
Privacy-Data & cookie usage: