பெரம்பலூர் அருகே அதிமுக பிரமுகர் சாவில் மர்மம்! கொலை என உறவினர்கள் புகார்! போலீசார் விசாரணை!!

schedule
2022-04-26 | 08:09h
update
2022-04-26 | 12:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Mysterious death of AIADMK personage near Perambalur! Relatives complain of murder! Police investigation !!

பெரம்பலூர் அருகே உள்ள நாரணமங்கலம், கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (சுமார் 44). அதிமுகவில் அவ்வூரில் கிளை செயலாளராகவும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், இருந்தார். இவர் நேற்றிரவு, நள்ளிரவில் ஆலத்தூர் கேட்டியிலிருந்து காரை செல்லும் சாலையில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது உடலை மீட்ட பாடாலூர் போலீசார் மர்ம சாவு என வழக்குப் பதிவு செய்து, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள், முன்விரோதம் காரணமாக சிலர் வெட்டி கொலை செய்து இருக்கலாம் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும், அவரது மனைவி போலீசில் கொடுத்த மனுவில், சில ஆண்டுகளுக்கு முன்பு, வேறு பெண்ணுடன், தொடர்பில் இருந்ததாகவும், அந்த பெண், கொரோனா நோயால் இறந்து விட்டதாகவும், அவர்களின் உறவினர்களின் மூலம் எனது கணவருக்கு ஆபத்து நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரெங்காராஜ் இறப்பு தற்போது உறுதியாக எதுவும் தெரிவிக்க முடியாது என்றும், உடற்கூறு ஆய்விற்கு பின்னரே, என்ன என்பது தெரியவரும். மேலும், கொலையா? விபத்தா? என்ற கோணத்தில் செல்போன் பதிவுகள், வைத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 14:57:04
Privacy-Data & cookie usage: