பெரம்பலூர் அருகே பள்ளி மாணவி மர்ம சாவு; போலீசார் விசாரணை!

schedule
2022-01-24 | 15:20h
update
2022-01-24 | 15:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Mysterious death of school student near Perambalur; Police investigation!

பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமராசு (வயது 55) விவசாயி இவரது மகள் ராகவி (15) இவர் பெரம்பலூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

Advertisement

ராமராசுக்கு 2 மகள் 1 மகன் உள்ளனர். ராமராசு நேற்று முன்தினம் தனது குடும்பத்தினர் அனைவருடன் திருப்பதி சென்று வந்தார். நேற்று மதியம் ராகவி தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே சென்று வருகிறேன் என்று கூறி சென்றுள்ளார்.

மாலை வரை ராகவி வீடு திரும்பவில்லை. இவரது பெற்றோர் ராகவியை தேடி வயல்வெளி பக்கம் வந்தனர். அப்போது தனியாருக்கு சொந்தமான தரைக் கிணறு ஒன்று கட்டையில் ராகவியின் செருப்பு, கண்ணாடி, கை கைகடிகாரம் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வேப்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வேப்பூர் தீயணைப்பு துறை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் கிணற்றில் மூன்று மணி நேர கடும் போராட்டத்திற்குப் பிறகு ராகவியை பிணமாக மீட்டனர்.

தகவலறிந்த மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று ராகவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராகவியின் தற்கொலை குறித்த காரணம் என்ன, ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 23:28:51
Privacy-Data & cookie usage: