பெரம்பலூர் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம், தாலிக்கொடியை பறித்து சென்ற மர்ம நபர்கள்!

schedule
2023-08-16 | 17:32h
update
2023-08-16 | 17:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Mysterious men snatched the talikodi from a woman who was riding a bike near Perambalur!

கற்பனை காட்சி

 

Advertisement

பெரம்பலூர் அருகே இன்று மாலை கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் தாலிக் கொடியை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், அம்மபாளையம் அடுத்த களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவபாலன் (44), இவரது மனைவி தேவி (39) இருவரும் பெரம்பலூர் வந்து விட்டு, இன்று மாலை களரம்பட்டிக்கு துறையூர் – பெரம்பலூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக் ஈச்சம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, அதிவேகமாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் தேவி அணிந்திருந்த சுமார் 5 பவுன் தாலிக் கொடியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று மறைந்தனர்.

இது குறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தாலிக்கொடியை பறித்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 19:33:08
Privacy-Data & cookie usage: