பெரம்பலூர் அருகே விஏஓ சாவில் மர்மம்; போலீசார் விசாரணை!

schedule
2022-02-25 | 07:29h
update
2026-06-14 | 14:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Mystery over VAO death near Perambalur; Police investigation!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(48). இவர் வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் கிராமத்தின் நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். தனது மோட்டார் சைக்கிளுடன் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள பெரியம்மாபாளையம் பிரிவு சாலையில் மர்மான முறையில், வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழிப்போக்கர்கள் தெரிவித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அரும்பாவூர் போலீசார் ஆரோக்கியசாமியின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது வழக்குப்பதிவு மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், வி.ஏ.ஓ வைத்திருந்த ரூ.95 ஆயிரம் ரொக்கப்பணம், மற்றும் அவர் அணிருந்த மோதிரம் உள்ளிட்ட நகைகள் பொருட்கள் அப்படியே அவருடன் கிடந்தது. வி.ஏ.ஓ. மர்மாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 14:19:52
Privacy-Data & cookie usage: