நாமக்கல் அருகே டாடா குரூப் சேர்மன் வீடு உள்ளிட்ட 2 வீடுகளில் மர்ம நபர்கள் கை வரிசை

schedule
2018-05-08 | 19:27h
update
2018-05-11 | 17:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Mystery persons in two houses, including the Tata Group Chairman house near Namakkal

நாமக்கல் அருகே டாடா குழும சேர்மன் வீடு உள்ளிட்ட, இரு வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

நாமக்கம் மாவட்டம், மோகனூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் பிரபு (26). இவர், நாமக்கல் – மோகனூர் ரோட்டில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

Advertisement

சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணிக்கு வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்த அவர் படுக்கையைவிட்டு எழுந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டுக்குள் இருந்து 3 மர்ம நபர் ஓட்டம் பிடித்தனர்.

வீட்டை சோதனை செய்ததில் பையில் வைத்திருந்த ரூ. 65 ஆயிரம் திருடு போயிருந்தது. மேலும், அங்கிருந்த அவரது மனைவியின் உடைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றதும் தெரியவந்தது.

மோகனூர் அக்ரஹாரத்தில் நடராஜன் என்பவர் வீடு உள்ளது. அவர் மகன்களில் ஒருவர் சந்திரசேகரன். அவர் டாடா குழுத்தின் சேர்மனாக உள்ளார்.

சம்பவத்தன்று இரவு அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பழைய பீரோவை வெளியே கொண்டுவந்து ஒரு கி.மீ. தூரம் காவிரி ஆற்றுக்கு தூக்கிச் சென்று கல்லால் உடைத்துள்ளனர்.

அதில் துணிகளை தவிர பணம் நகை இல்லாததால் அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். ஏற்கனவே பிரபு வீட்டில் காணாமல்போன அவரது மனைவியில் உடைகள் நடராஜன் வீட்டில் கிடந்தது.

இரு சம்பவத்திலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என மோகனூர் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் வ ழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 04:21:17
Privacy-Data & cookie usage: