பெரம்பலூர் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் அருள் மர்ம சாவு: போலீசார் விசாரணை!

schedule
2021-09-13 | 08:40h
update
2021-09-13 | 09:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Naam Tamil Party Perambalur District Secretary Arul Mysterious Death: Police Investigation!

நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் வக்கீல் அருள், பெரம்பலூரில் உள்ள அவரது வீட்டில் இன்று மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூரை சேர்ந்த பரமசிவம் மகன் அருள் (48), வக்கீலாக பெரம்பலூர் கோர்ட்டில் பணிபுரிந்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து, ஜல்லிக்கட்டு, உள்ளிடட பல்வேறு சமூக பிரச்சனைகளை முன்னெடுத்து போராட்டம் நடத்தி வந்தார். மேலும், பல சமூக பிரச்சனைகளையும் கையில் எடுத்து போராட்டம் நடத்தியுள்ளார். குன்னம் தொகுதியில் வேட்பாளராகவும் இரு முறை களம் கண்டுள்ளார். மேலும், இவரது மனைவி தமிழரசி ஓலைப்பாடி ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை வீட்டில் பூட்டப்பட்டிருந்து நிலையில் வீட்டில் நீண்ட நேரம் திறக்காததால், கதவை திறந்த பார்த்த போது துண்டுடன் இறந்த நிலையில் சுவற்றில் சாய்ந்து கிடந்தார். மாராடைப்பால் உயிரிழந்தாரா அல்லது உணவில் விஷம் வைத்து கொன்றனரா அல்லது, வேறு யாராவது முன்விரோத்தில் கொலை செய்து கிடத்தி விட்டு சென்று விட்டனரா, அல்லது கள்ளக்காதல் விவகாரமா என்ற பல்வேறு கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது உடல், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என தெரியவருகிறது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 04:07:52
Privacy-Data & cookie usage: