NABARD Bank proposes to release Rs. 3965 crore Loans for Perambalur District for 2019-20

பெரம்பலூர் மாவட்டத்திற்கான 2019 – 2020 ஆண்டுக்கு நபார்டு வங்கியின் வளம் சார்ந்த வங்கிக் கடன் திட்டம் ரூபாய் 3965 கோடி அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேற்று, மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெளியிட்டாh;.

அதில், மொத்த வளம் சார்ந்த கடனாற்றல் மதீப்பீடான ரூ.3965 கோடியில் ரூபாய் 3238 கோடி வேளாண் துறைக்கும், ரூபாய் 274 கோடி சிறு குறு தொழில்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கல்வி கடனுக்காகவும், வீட்டு கடனுக்காகவும், ஏற்றுமதி கடனுக்காகவும், தனித்தனியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திட்ட அறிக்கை அரசின் பல துறைகள், வங்கிகள் மற்றும் துறை சாh;ந்த அதிகாhpகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வங்கியானது சிறு குறு தொழில்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க முன் வரவேண்டும். மேலும் வங்கிக் கிளைகள் தங்களது ஆண்டுத் திட்ட அறிக்கையை தயாரிக்கும் பொழுது நபார்டு வங்கியின் அறிக்கையை பயன்படுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நபார்டு வங்கி தயாரித்த பெரம்பலூர் மாவட்டத்திற்கான 2019-20-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த வங்கிக்கடன் திட்டத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சந்தா வங்கியாளர் கூட்டத்தில் வெளியிட்டார். அதன்,முதல் பிரதியை மாவட்ட ஆட்சியரிடமிருந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் பெற்றுக்கொண்டடார்.

இக்கூட்டத்தில், அரசு மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!