சத்தான உணவு குறித்து தேசிய அளவிலான போட்டி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்க நாமக்கல் ஆட்சியர் அழைப்பு

schedule
2019-01-12 | 10:07h
update
2019-01-12 | 10:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Namakkal Collector is invited to participate in national level competition students on nutritious food

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால், மகாத்மா காந்தி 150வது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியா முழுமைக்கும் நடத்தப்படும் தேசிய அளவிலான, சரியான, சத்தான சரிவிகித உணவு என்னும் மையக் கருத்தினைக் கொண்டு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நுகர்வோர்கள் பங்குபெறும் வகையில், உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக ஓவியம், சுவரோவியம், டிஜிட்டல் கலை போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் நடத்தப்பட உள்ளன.

Advertisement

இதில் முதல் கட்டமாக இந்தப் போட்டிகளை பள்ளி அளவில் நடத்த விரும்பும் பள்ளிகள் அனைத்தும் இன்டர்நெட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் போஸ்டர்கள் தேசிய அளவிலான தேர்வுக்கு அனுப்பப்படும். எனவே, ஆரோக்கியமான இந்தியாவினை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த போட்டிகளில் மாணவ, மாணவியர் அவர்கள் படிக்கும் பள்ளிகளின் மூலம் தங்களது பெயரினை பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.

டிஜிட்டல் போட்டிக்கு பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி, கல்லூரி மாணவ, மாணவியரும் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 06:51:25
Privacy-Data & cookie usage: