Namakkal District Government Officers and Employees Day Meeting was held today

நாமக்கல் மாவட்ட, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழக அரசின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, பொதுப்பணித்துறை, பள்ளிக்கல்வித்துறை, காவல் துறை, கூட்டுறவு துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உணவு பாதுகாப்பு துறை, சமூக நலத்துறை, சுற்றுலாத் துறை, தமிழ்வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் முன்னாள் படைவீரரர்கள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் என்றும், கூட்டத்தில் பெறப்படுகின்ற மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 45 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அவற்றை சம்மந்தப்பட்ட துறை மூலம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லிராஜ்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!