நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம்

schedule
2018-05-22 | 15:58h
update
2026-04-24 | 06:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Namakkal East District Congress Party Activists Meeting

நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக்நவீத் தலைமை வகித்தார். இதில்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முன்னாள் எம்பி ராணி கலந்துகொண்டு பேசியதாவது:

Advertisement

நாமக்கல்லில் வரும் 31ம்தேதி நடைபெறும் மாவட்ட வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்கிறார். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் நலன் மீது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜ அரசுக்கு எந்த காலத்திலும் அக்கரை இருந்தது இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வருவது உறுதியாகிவிட்டது. அதற்கேற்ப காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பணியாற்ற வேண்டும்என பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி, நகர தலைவர் மோகன், மகளிர் அணி நிர்வாகிகள் கலைசெல்வி, ராணி, வட்டார தலைவர்கள் குப்புசாமி, ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2026 - 06:18:32
Privacy-Data & cookie usage: