நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வரும் 23, 24 தேதிகளில் சார்பு அணிகளின் நிர்வாகிகள் கூட்டம்

schedule
2018-05-19 | 09:09h
update
2026-04-28 | 21:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Namakkal Eastern District DMK on 23rd and 24th of the executive teams meeting

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சார்பு அணிகள் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பார்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி நாமக்கல் கிழக்கு மாவட்டத்திலுள்ள மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. வரும் 23ம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கு இளைஞர் அணி,காலை 11 மணிக்கு மாணவர் அணி, காலை 12 மணிக்கு விவசாய அணி, மதியம் 1 மணிக்கு விவசாய தொழிலாளர் அணி கூட்டம் நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு தகவல் தொழில்நுட்ப அணி, மாலை 4 மணிக்கு மகளிர் அணி, மாலை 5 மணிக்கு மகளிர் தொண்டர் அணி, மாலை 6 மணிக்கு தொண்டர் அணி மற்றும் மாலை 7 மணிக்கு வழக்கறிஞர் அணி கூட்டமும் நடைபெறுகிறது. 24ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இலக்கிய அணி, காலை 11 மணி மீனவர் அணி, மதியம் 12 மணிக்கு நெசவாளர் அணி, மதியம் 1 மணிக்கு கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை கூட்டம் நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு ஆதிதிராவிடர் நலக்குழு, மாலை 4 மணிக்கு சிறுபான்மை அணி, மாலை 5 மணிக்கு பொறியாளர் அணி, மாலை 6 மணி க்கு வர்த்தகர் அணி, மாலை 7 மணிக்கு மருத்துவர் அணி கூட்டமும் நடைபெறுகிறது.இக்கூட்டத்தில் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். வரும்போது மினிட் நோட் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.04.2026 - 21:39:50
Privacy-Data & cookie usage: