புறநோயாளிகள் சி்கிச்சையை நிறுத்தி நாமக்கல் அரசு மருத்துவர்கள் போராட்டம்: மக்கள் அவதி

schedule
2018-12-04 | 14:48h
update
2026-04-21 | 22:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Namakkal Government Doctors Protest: Public are suffering

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் புறநோயாளிகள் சிகிச்சையை நேற்றுமுற்றிலுமாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

Advertisement

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் நேற்று புறநோயாளிகளுக்கான சிகிச்சையை முற்றிலுமாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு,பள்ளிபாளையம், குமாரபாளையம்,கொல்லிமலை, சேந்தமங்கலம், பரமத்தி வேலுார், வெண்ணந்தூர் உள்ளிட்ட இடங்களில் 9 அரசு மருத்துவமனை, 15வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 45 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.

மேற்குறிப்பிட்ட இந்த மருத்துவமனைகளில் நேற்று புறநோயாளிகள் சிகிச்சையை முற்றிலுமாக நிறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாள்தோறும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம்,துணை சுகாதார நிலையங்களில் தலா10 ஆயிரம் என, மொத்தம் 20 ஆயிரம் மக்கள் பல்வேறு உடல்நல குறைபாடுகளுக்கு சிகிச்சைப் பெற்றுச் செல்வது வழக்கம். எனினும்,மருத்துவர்களின் போராட்டம் காரணமாக புறநோயாளியாக சிகிச்சை பெற்றுச் செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதைத்தொடர்ந்து 8ம் தேதி முதல் 11 ம் தேதி வரை முன் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்படும். முதலமைச்சர் விரிவானகாப்பீட்டுத் திட்டமும் , மருத்துவ மாணவ வகுப்புகளும் புறக்கணிக்கப்பு போராட்டமும் நடத்தப்பட உள்ளது என,மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2026 - 22:06:05
Privacy-Data & cookie usage: