நாமக்கல், அரசு மகளிர் கல்லூரியில் பொன்விழா ஆண்டு: 150 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்!

schedule
2019-01-04 | 17:07h
update
2019-01-04 | 17:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Namakkal, Government Women’s College Golden Jubilee Anniversary: 150kg cake cut celebration!
Advertisement

Namakkal, Government Women’s College Golden Jubilee Anniversary: 150kg cake cut celebration!

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 150 கிலோ எடையுள்ள கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பொன்விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்தார். கல்லூரி துவங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் 150 கிலோ எடையுள்ள கேக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டது.

காலை நேர வகுப்பு மற்றும் மாலை நேர வகுப்பு மாணவியர்கள் சேர்ந்து பகல் 12 மணிக்கு கேக் வெட்டி ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் வழங்கினார்கள். தொடர்ந்து மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான பேராசிரியர்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 23:49:31
Privacy-Data & cookie usage: