நாமக்கல்லில் இரு வெவ்வேறு விபத்துகளில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பலி

schedule
2018-11-13 | 16:01h
update
2026-03-27 | 14:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Namakkal in two different accidents, including a retired HeadMaster, kills 2

நாமக்கல்லில் பகுதியில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாமக்கல் போதுப்பட்டியை சேர்ந்தவர் காளி (வயது 78). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவர் நாமக்கல் உழவர்சந்தையில் காய்கறிகள் வாங்கி கொண்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். நாமக்கல்-பரமத்தி ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த அரசு நகர பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

Advertisement

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த காளியை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிக்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன்இன்றி காளி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து அவரது மகன் விஜயகுமார் (54) கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் பெரியப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (55). இவர் நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறை ஒன்றில் நைட் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் வேலைக்கு சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். நாமக்கல் வள்ளிபுரம் பைபாஸ் அருகே சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் இவரது சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன்இன்றி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.03.2026 - 14:57:05
Privacy-Data & cookie usage: