Namakkal Job Opportunity in Private Job Campus tomorrow

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (11ம் தேதி) நடைபெறுகிறது.
தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியாகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளுக்கு அவர்களது பதிவு மூப்பின்படி பரிந்துரைக்கப்படும்.
இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், அக்கவுண்டன்ட், டைப்பிஸ்ட், கேஷியர், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு டிப்ளமோ, பட்டபடிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண் தேவைப்படுகின்றனர்.
அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் இன்று (11ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.