நாமக்கல் மல்லசமுத்திரம் பகுதியில் நாளை சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம்

schedule
2018-05-07 | 13:54h
update
2018-05-10 | 02:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Namakkal Mallasamudram is tomorrow
Special Public Relations Project Camp

நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட மல்லசமுத்திரம் பகுதியில் நாளை சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.

Advertisement

இதுகுறித்து திருச்செங்கோடு ஆர்டிஓ பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா மல்லசமுத்திரம் உள்வட்டத்திற்கு உட்பட்ட மல்லசமுத்திரம் மேல்முகம் மற்றும் மல்லசமுத்திரம் கீழ்முகாம் ஆகிய கிராம பொதுமக்களின் குறைகேட்கும் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நாளை (9ம் தேதி) புதன்கிழமை காலை 10 மணிக்கு மல்லசமுத்திரம் நந்தவனபாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்து பொதுமக்களின் குறைகளை கேட்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

எனவே பொதுமக்கள் இந்தமுகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 23:15:22
Privacy-Data & cookie usage: