நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

schedule
2018-12-27 | 08:05h
update
2018-12-27 | 08:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Namakkal Tahsildar Office was previously demonstrated by the Village Administrative Officers

நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரே அரசாணையின் மூலம் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10ம்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இவர்களின் போராட்டம் நேற்று 16வது நாளாக நீடித்தது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மொத்தம் உள்ள 311 கிராம நிர்வாக அலுவலர்களில் 177 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மாவட்டத்தில் இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்த சுமார் 75 ஆயிரம் விண்ணப்பங்கள் தேங்கி இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் நேற்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் தாலுகா அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் செந்தில்கண்ணன் தலைமை வகித்தார்.

வட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். மகளிர் அணி தலைவி தமிழரசி வரவேற்றார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் வட்ட பொருளாளர் ராமன் நன்றி கூறினார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.08.2026 - 23:13:54
Privacy-Data & cookie usage: