நாமக்கல் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

schedule
2018-12-13 | 13:53h
update
2026-05-24 | 17:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Namakkal Taluk office was infront of demonstrated by the Village Administrative Officers

நாமக்கல் தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் செந்தில் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பழனிசாமி, வட்டார செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

இதில் 50 சதவீதம் கிராம நிர்வாக அலுவலராக உள்ளவர்ளவர்களில், அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகத்தில் மின் வசதி,கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் செய்துதர வேண்டும்.

கடந்த 2013ம் ஆணடு முதல் பொதுமக்கள் அனைவரும் இன்டர்நெட்டில் சான்றுகள் பெற்று வருகிறார்கள். இவையனைத்தும் இதுவரை எங்களது சொந்த செலவில் செய்து வருகின்றோம். ஆகவே அதற்கான கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதி செய்துதரவேண்டும். சில கிராம நிர்வாக அலுவலர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்களை கூடுதலாக கவனித்து வருகிறார். அதற்குண்டான காலிபப்ணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளி்ட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுத்தப்பட்டன. வட்டார பொருளாளர் ராமன் நன்றி கூறினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.05.2026 - 17:19:58
Privacy-Data & cookie usage: