பட்டா வழங்க நரிக்குறவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு !

schedule
2016-06-13 | 19:57h
update
2026-06-27 | 12:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் அருகே எறையூரில் உள்ள நரிக்குறவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் இன்று மீண்டும் மனு அளித்தனர்.

இதுகுறித்து எறையூரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட எறையூர் கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவருக்கு, புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்ய அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிலத்தை சீரமைத்து கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தோம்.

Advertisement

இந்நிலையில், அந்த இடத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்காக, மாவட்ட நிர்வாகம் முயற்சித்ததை அறிந்த நாங்கள், உண்ணாவிரதம் மேற்கொண்டதை தொடர்ந்து ஜவுளிப் பூங்கா அமைக்க வேறு இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதையடுத்து, எங்கள் நிலத்தில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள முயற்சித்தபோது, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் தடுத்தி நிறுத்தினர். அதைத்தொடர்ந்து, அந்த இடத்தில் எவ்வித பணிகளும் செய்யாததால் தற்போது முள்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது.

எனவே, எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நாங்கள் பயன்படுத்தி வந்த விவசாய நிலத்துக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நிலம் தொடர்பாக ஓர் வழக்கு ஒன்று நீதி மன்றத்தில் நடந்து வருவதாக கூறபடுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 12:30:38
Privacy-Data & cookie usage: