பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்!

schedule
2023-02-10 | 09:03h
update
2023-02-10 | 09:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

NATIONAL LOK ADALAT tomorrow in Perambalur!

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு ஆணையின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து, முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடைபெற உள்ளது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் – வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள்(சமாதானமாக போககூடிய வழக்குகள்); ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக செல்ல ஓர் அறிய வாய்ப்பாக அமைய உள்ளது.

Advertisement

தேசிய மக்கள் மன்றத்தின் முன்பாக, வழக்குகளில் சமரசமாக செல்வதால், நீதிமன்ற கட்டணமாக செலுத்தியுள்ள முழுத்தொகையையும் திருப்பி பெற்றுக் கொள்ளலாம்.
சமரசமான அன்றைய தினமே தீர்ப்பு நகல் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. தரப்பினர்களுக்கு வெற்றி-தோல்வி என்ற மனப்பான்மை ஏற்படாது. எனவே, பொதுமக்கள்-வழக்காடிகள் 11.02.2023-ம் தேதியன்று நடைபெற உள்ள தேசிய மக்கள் மன்றத்தில் தங்கள் வழக்குகளுக்கு சமரசம் செய்வதற்கான அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது சம்மந்தமாக, தினந்தோறும் சமரசப் பேச்சுவார்த்தை பெரம்பலூர், மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெரம்பலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296206 என்ற தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு, அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம், பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 05:19:53
Privacy-Data & cookie usage: