பெரம்பலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 715 வழக்குகளில் சுமார் ரூ. 8 கோடி தீர்வு

schedule
2019-12-14 | 15:19h
update
2019-12-14 | 15:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

National lok adalt held at Perambalur Court

சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் பெரம்பலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி (பொறுப்பு) எஸ். மலர்விழி தலைமையில் நடைபெற்றது.

Advertisement

நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி ஜி. கருணாநிதி, தலைமை நீதித்துறை நடுவர் எஸ்.கிரி, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி எம். வினோதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவர்கள் அசோக்பிரசாத், ப.கருப்பசாமி ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளையும், தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளில் நிலுவையில் உள்ள வாரா கடன் பொறுத்த வழக்குகளையஜம் விசாரித்து தீர்வு வழங்கியது. 159 வங்கி வழக்குகளில் ரூ.1 கோடியே 24 லட்சத்து 35 ஆயிரத்து 439ம், 64 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.3 கோடியே 44 லட்சத்து 59ஆயிரத்து 910-க்கும் தீர்வஜ காணப்பட்டது.

24 சிவில் வர்க்குகளில் ரூ.2 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 054-ம், 617 சிறு குற்ற வழக்குகளில் ரூ.3லட்சத்து 39 ஆயிரத்து 600-ம் என மொத்தம் 715 வழக்குகளில் ரூ.7கோடியே 97 லட்சத்து 59 ஆயிரத்து 215-க்கு தீர்வு காணப்பட்டது. மேற்படி மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் இளவரசன், திருநாவுக்கரசு, சங்கர், மணிவண்ணன், துரை, துரை.பெரியசாமி, ஏ.அருணன், சிங்காரம், ராமசாமி மற்றும் வழக்கறிஞர்கள், வருவாய்த் துறையினர், காவல் துறையினர், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.07.2026 - 14:43:54
Privacy-Data & cookie usage: