National People’s Court in Perambalur, Kunnam and Veppandattai courts! Chief Justice A. Balkis Info!

பெரம்பலூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள் ,கல்விக் கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள், ஆகிய வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் பேச்சுவார்த்தை மூலம் சமரச முறையில் தீர்வு காணப்படும்.

மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பிக் கொடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்தி உங்களது வழக்குகளை விரைவாகவும் சமரச முறையிலும் தீர்வு காண முன் வர வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ.பல்கீஸ் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!