பெரம்பலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் : 464 வழக்குகளில் ரூ.2,50,34,122/- க்கு தீர்வு!

schedule
2022-11-12 | 16:14h
update
2022-11-12 | 16:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

National People’s Court in Perambalur: Settlement for Rs.2,50,34,122/- in 464 cases!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடப்பு ஆண்டின் 4வது (இறுதி) தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. பல்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி எஸ். முத்துகுமரவேல், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஏ. தனசேகரன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எம். மூர்த்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, செயலாளர் / சார்பு நீதிபதி (பொ) எஸ். அண்ணாமலை, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர். ராஜமகேஸ்வர், நீதித்துறை நடுவர்கள் பி. சுப்புலட்சுமி, ஆர். சங்கீதாசேகர், வேப்பந்தட்டை உரிமையியல் நீதித்துறை நடுவர் எஸ்.பி. பர்வதராஜ் ஆறுமுகம் மற்றும் குன்னம் உரிமையியல் நீதித்துறை நடுவர் எஸ். கவிதா ஆகியோரின் முன்னிலையில் 6 அமர்வுகளாக நடைபெற்றது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டுள்ள வகையில் 40 -வங்கி வழக்குகளில் ரூ21,18,000/-ம், 38-மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ. 1,35,55,694/-ம், 08-சிவில் வழக்குகளில் ரூ. 88,69,128/-ம் 01-காசோலை வழக்கில் ரூ.1,00,000/-ம் 377-சிறு குற்ற வழக்குகளில் ரூ.3,91,300/- ஆக மொத்தம் 464-வழக்குகளில் ரூ.,2 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 122/-த்திற்கு தீர்வு காணப்பட்டது.

வழக்கறிஞர் சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, செயலாளர் சுந்தரராஜன், அட்வகேட் அசோசியேசன் தலைவர் மணிவண்ணன், வழக்கறிஞர்கள் அருணன், முகமது இலியாஸ், அறிவழகன், சங்கர் மற்றும் இதர வழக்கறிஞர்கள், காவல் துறையினர், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளார்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.05.2026 - 12:22:10
Privacy-Data & cookie usage: