நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி பொருளாதார துறை சார்பில் தேசிய கருத்தரங்கம்

schedule
2018-09-27 | 12:10h
update
2026-04-23 | 02:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

National Seminar on Economic Dept. of Namakkal Government Women’s College

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி பொருளாதாரத்துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி பொருளாதாரத்துறை சார்பில் விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பின் மீது காலநிலை மாற்றத்தின் தாக்கம் என்ற தலைப்பில் ஒரு நாள் தேசியகருத்தரங்கம் நடைபெற்றது.

Advertisement

கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்தார். பொருளியல் துறை தலைவர் புனனேஸ்வரி வரவேற்றார். எதியோபியா மதவலாபு பல்கலைக்கழக பொருளியல் துறை இணை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கருத்தரங்கினை துவக்கிவைத்து விழா மலரை வெளியிட்டார்.

இதில் தமிழ்நாடு பொருளாதார நிபுணர்கள் சங்க முன்னாள் செயலாளர் சூரியகுமார், காந்திகிராமம் கிராமப்புற நிறுவனம் பொருளியல் துறை தலைவர் ராஜேந்திரன், பொருளியல் துறை ஆராய்ச்சி ஆலோசகர் குமார், ஐயம்பிள்ளை, சேலம் பெரியார் பல்கலைக்கழக பொருளியல் துறை உதவிப்பேராசிரியர் சுகிர்தாராணி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

இந்த கருத்தரங்கில் ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்களும், பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். மேலும் தமிழகத்தில் இருந்து 12 பல்கலைக்கழகத்தில் இருந்தும் மற்றும் 53 கல்லூரிகளில் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கருத்தரங்கின் முடிவில் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பொருளாதாரத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 02:06:25
Privacy-Data & cookie usage: