Perambalur near continuous rain and wind damage to maize hundreds of acres

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் காற்று மழையின் காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதமானது, இழப்பீடு வழங்க கோரிக்கை உழவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வறட்சி மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் மக்காச்சோளமும் முக்கிய பயிராகும். வேப்பூர் அருகு உள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

கடந்த ஆடி மாதம் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் வளர்ந்து புவூம் கதிருமாக வளர்ந்து நிற்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் வேகமாக வீசும் காற்று காரணமாக வேப்பூர் ஒன்றியம், வைத்தியநாதபுரம், மற்றும் வேப்பந்தட்டை, பெரம்பலூர், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பயிரிடபட்டிருந்த மக்காசோளம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு மதிப்புள்ளள மக்காச்சோளப் பயிர்கள் சாய்ந்து போனது.

இதில் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகள் சிலர் வயல்களில், மக்காச்சோள பயிர் இரண்டாக உடைந்தும் போயின. இதனை மாடுகளுக்கு தீவனமாக கொடுத்து வருகின்றனர். மக்காச்சோளம் சாகுபடி செலவு ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரத்திற்கு மேலாகும். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலை 8 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் :

பெரம்பலூர்-31.00மி.மீ, செட்டிகுளம்-12.00மி.மீ, தழுதாழை-07.00 மி.மீ, பாடாலூர்-00.00 மி.மீ
வேப்பந்தட்டை-08.00 மி.மீ, கூடுதல்-58.00 மி.மீ மாவட்டத்தின் சாராசரி மழையளவு -11.60.மி.மீ.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!