பெரம்பலூர் அருகே ஓய்வு பெற்ற மருத்துவர் வீட்டில் கார் திருடு: மர்ம நபர்கள் கைவரிசை

schedule
2017-02-28 | 18:54h
update
2026-06-27 | 04:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

near in Perambalur retired doctor’s house near the car stolen: Unidentified persons tampering

பெரம்பலூர் அருகே ஓய்வு பெற்ற மருத்துவர் வீட்டில் காரை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள சின்னாறு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 60). இவர் ஓய்வு பெற்ற மருத்துவர். இவருடைய மகன் விவேக் இவரும் மருத்துவராக பணியாற்றுகிறார் தந்தை மகன் இருவரும் சின்னாறில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

Advertisement

மகேந்திரன் லெப்பைகுடிக்காட்டில் சொந்தமாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல் தனது காரில் கிளினிக்கிற்கு சென்றுவிட்டு பின்னர் இரவு தனது வீட்டிற்கு வந்து காரை நிறுத்திவிட்டு வீட்டின் கேட்டை பூட்டிவிட்டு இரவு தூங்க சென்றுள்ளார்.

இன்று காலை வீட்டில் வெளியில் வந்து பார்க்கும் போது கேட் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் காரை திருடி சென்றது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த மருத்துவர் மகேந்திரன் இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசில் புகார் அளித்தார், புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காரை திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 04:12:06
Privacy-Data & cookie usage: