Near in Perambalur, stopped the child marriage by TN. Govt. staffs

schedule
2016-07-11 | 15:15h
update
2026-06-28 | 18:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Near in Perambalur, stopped the child marriage by TN. Govt. staffs

பெரம்பலூர் அருகே குழந்தை திருமணம் நிறுத்தம்

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் நடக்க இருந்த குழந்தை திருமணத்தை பொதுமக்கள் தகவலின் பேரில் தடுத்து நிறுத்தினர்

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த சுப்பம்மாள் என்பவரின் மகள் பிரபா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) வயது- 16 ( பிறந்த தேதி – 11.06.2000) என்பவரை பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த சதிஷ் என்பவருக்கு இன்று காலை மணமகன் வீட்டில் திருமணம் நடைபெறுவதாக சைல்டு லைன் மூலம் தகவல் வந்தது.

Advertisement

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அரசு பணியாளர்கள் மேற்கொண்ட விசாரணையில், கிடைத் ததகவல் உண்மை என உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டு குழந்தை பாதுகாப்பு குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டு குறுகிய கால மகளிர் தங்கும் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

குழந்தை திருமணம் பற்றிய தகவல் அளிக்க விரும்புவோர் கட்டணமில்லா தொலைபேசி 1098 என்ற எண்ணிலோ அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04328-224122 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 18:15:10
Privacy-Data & cookie usage: