பெரம்பலூர் அருகே லாரியை முந்த முயன்ற ஆட்டோ, லாரி சக்கரத்தில் சிக்கியதில் 2 பேர் பலி!

schedule
2020-01-07 | 05:36h
update
2020-01-07 | 05:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Near in Perambalur, tried to overtake a truck near the auto , suffered 2 killed in truck wheel!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பெரம்பலூர் அரியலூர் சாலையில் ஒரு ஆட்டோவில் ஒரு ஆட்டோவில் இரண்டு பேர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது முன்னால் அரியலூர் நோக்கி, சென்று கொண்டிருந்த லாரியை ஆட்டோ முந்த முயன்ற போது எதிரே வாகனம் வந்ததால் இடது புறமாக ஒதுங்க முயன்ற போது பின்னால் வந்த லாரியில் ஆட்டோ சிக்கியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதைக் கண்ட வழிப்போக்கர்கள் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை வேப்பூர் தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர்கள் குன்னம் அதிஸ்னாபுரம் கிராமத்தை சேர்ந்த அழகன் மற்றும் ஆனந்தன் என தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.09.2026 - 08:30:31
Privacy-Data & cookie usage: