நாமக்கல் அருகே விவாகரத்து பெற்ற மனைவிக்கு கத்தி குத்து; கட்டிட மேஸ்திரி கைது

schedule
2018-11-28 | 06:04h
update
2026-03-23 | 09:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Near Namakkal knife stab to the divorced spouse; Maistry building arrested

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே விவாகரத்து பெற்ற மனைவியை கத்தியால் குத்திய கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள மலைவேப்பன்குட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36) கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மீனாட்சி (வயது 32) இவர்களுக்கிடையே கருத்த வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பிரிந்தனர். இந்த நிலையில் சேந்தமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட காந்திபுரத்தில் உள்ள வடக்கு அருந்ததியர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான வீரக்குமார் (வயது 36) என்பவரை மீனாட்சி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இதையடுத்து சம்பவத்தன்று விஜயகுமார், வீரக்குமார் வீட்டிற்கு சென்று மீனாட்சியை குடும்பம் நடத்த வர வற்புத்தினார். அதற்கு மறுத்ததால் திடீரென்று கத்தியால் மீனாட்சியை குத்திவிட்டு வீரக்குமார் தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த மீனாட்சி சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து மீனாட்சி சேந்தமங்கலம் போலிசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலிசார் வழக்குபதிவு செய்து கட்டிட மேஸ்திரி விஜயகுமாரை கைது செய்து நாமக்கல்லில் உள்ள சிறையில் அடைத்தனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.03.2026 - 09:14:01
Privacy-Data & cookie usage: