நாமக்கல் அருகே சாலை விபத்து : தந்தை பலி : தந்தை வேனில் இருந்து தள்ளிவிட்டதால் உயிர் தப்பிய மகன்

schedule
2018-05-07 | 14:48h
update
2018-05-10 | 02:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Near Namakkal road accident: the father killed the father of the son who survived the shift from van

நாமக்கல் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் மகன் கண் எதிரிலேயே தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

ஈரோடு மாவட்டம் சித்தோடை சேர்ந்தவர் பழனியப்பன் (49). இவரது மகன் வினோத்சுப்பையா (16). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை சிறப்பு வகுப்பு முடித்து தனது மகனை வேனில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது பரமத்தி அருகே லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் பழனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வினோத்சுப்பையா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி மோதுவதை அறிந்த தந்தை, தன்னை கீழே தள்ளிவிட்டு காப்பாற்றியதாக அவரது மகன் வினோத் சுப்பையா கூறினார்.

இச்சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தம்பாளையம் அடுத்துள்ள வால்நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன் (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 23:22:00
Privacy-Data & cookie usage: