பெரம்பலூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

schedule
2017-08-21 | 19:47h
update
2026-09-24 | 22:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

near perambalur, a gold chain flush from woman, blocked inspectors from the robbers fled away.

பெரம்பலூர் மாவட்டம் , வி.களத்துர் அருகே உள்ள அயன்பேரையூரை சேர்ந்தவர் செல்வமுருகன் மனைவி வசந்தி (வயது 33). இவர் இன்று மகாத்மா காந்தி நூறுநாள் வேலை திட்டத்திற்று வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அயன்பேரையூர் அய்யனார் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்தவன் திடீரென வசந்தியின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்கசங்கிலியை பறித்தான். பின்னர் மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் கொள்ளையர்கள் இருவரும் வி.களத்தூர் நோக்கி தப்பி சென்றனர்.

Advertisement

இந்நிலையில் வி.களத்தூர் – பசும்பலூர் இடையே வாகனச் சோதனையில் கை.களத்தூர் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக செயின்பறிப்பு கொள்ளையன்கள் வந்துள்ளனர். அவர்களை உதவி ஆய்வாளர் முருகேசன் மறித்துள்ளார். ஆனால் கொள்ளையர்கள் வண்டியை நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை வேகமாக கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கீழே விழுந்ததில் உதவி ஆய்வாளர் முருகேசன் படுகாயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த இடத்திற்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி திஷாமித்தல், மங்களமேடு டி.எஸ்.பி ஜவஹர்லால் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.09.2026 - 22:06:45
Privacy-Data & cookie usage: