Near Perambalur, people blocked the road with empty buckets for drinking water!

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது களரம்பட்டி கிராமம், இன்று அக்கிராம மக்கள் காலி குடங்களுடன் பெரம்பலூர் – துறையூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

களரம்பட்டி கிராமத்தில் உள்ள 9 வது வார்டில் குடிதண்ணீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்றும், கிராமத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பைப் லைன் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், இதனால் அனைத்து பகுதிகளுக்கும் 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே குடிதண்ணீர் வினியோகம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படுவதாகவும், தங்களுக்கு வழக்கம் போல் 1 மணி நேரம் குடிதண்ணீர் வழங்க வேண்டும் எனக் கோரி சாலை மறியலில் நடத்தினர்.

பெரம்பலூர் போலீசார் மற்றும் களரம்பட்டி ஊராட்சித் தலைவர் சுதாகர், மறியிலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், பேச்சு வார்த்தை நடத்தி ஜல்ஜுவன் திட்டத்தின் மூலம் பைப் லைன் போடும் பணி முடிந்தவுடன் வழக்கம் போல் குடிதண்ணீர் வழங்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இதனால், பெரம்பலூர் – துறையூர் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!