மைசூர் பில்டர் காபியின் புதிய கிளை பெரம்பலூர் 4 ரோடு ஜங்சனில் நாளை தொடக்கம்!

schedule
2023-10-23 | 18:50h
update
2023-10-23 | 18:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

New Branch of Mysore Filter Coffee Opening Tomorrow at Perambalur 4 Road Junction!

மைசூர் பில்டர் காபி நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு கிளைகளுடன் 2014 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2000 ஆண்டு முதல் காபி பவுடர் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது.

பெரம்பலூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதன் கிளை கே.வி.பி வங்கி அருகில் தொடங்கப்பட்டது. இதன் ரிச் சுவை, அதிக ஒரிஜினல் மணம் மற்றும் மிகுந்த தரம் கொண்ட பாரம்பரிய முறையில் நேர்த்தியான காபி கொட்டைகளை கொண்டு காபி பவுடர் தயாரித்தல், வாடிக்கையாளர்கள் பாக்கட் பிரண்ட்லி விலை, அளவு மற்றும் சுத்தம் சுகாதாராம், பல்வேறு வகை ஸ்நானக்ஸ்கள் ஆகியவை அதிகளவு பெரம்பலூர் நகர வாடிக்கையாளர்களை அதிகளவு கவர்ந்ததால், கூடுதலாக பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் ஒரு கடை திறக்கப்பட்டது.

Advertisement

வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பை தொடர்ந்து, மைசூர் பில்டர் காபியின் 3வது கிளையாக பெரம்பலூர் 4ரோடு சந்திப்பு அருகே அதன் புதிய கிளை திறப்பு நாளை காலை தொடங்குகிறது. அஸ்வின் குழு தலைவர் கே.ஆர்.வி கணேசன் திறந்து வைக்கிறார். மேலும் பல முக்கிய பிரமுர்கள், வணிகர்கள், அரசியல் பிரமுகர்கள், பல தரப்பினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வாழ்த்துகின்றனர்.

மேலும், இதற்கான ஏற்பாடுகளை ரவீந்திரன் – நித்யா ஆகியோர் செய்து வருகின்றனர். அது சமயம் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நல்ஆதரவு வழங்க வேண்டும் என்றும் நாளை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை வருகை தரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நாளை ஒரு நாள் கட்டணமில்லாமல் காபி விருந்து அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.08.2026 - 08:14:43
Privacy-Data & cookie usage: